இது முழுக்க முழுக்க உங்களின் மீது என் பற்றே காரணம்

This is a mail link: Send Mail

சனி, 3 நவம்பர், 2012

நோக்கம்


எனது பயணம் 


தர்மன் உருட்டிய தாயம்...
யூதாஸ் கொடுத்த முத்தம்...
புத்தர் பார்த்த மரணம்...
காந்தி கண்ட அரை நிர்வாணம் ....

            -இப்படி எல்லோரோட வாழ்க்கையிலும் ஏதோ ஒரு கணம் மொத்தமாக மாற்றும்;புரட்டிப் போடும்;பந்தாடும்தானே? அப்போ கணங்களால் ஆனதுதான் வாழ்கை ....சரியா?!


                    என் வாழ்க்கையையும் புரட்டி போட்டது நீயா நானா கோபிநாத்தின் உணர்ச்சிமிகு வார்த்தைகள்.அவர் சொற்பொழிவை கேட்ட அந்த கணம்தான் என் எண்ணங்களை  புரட்டி போட்டது .

                                                                             கோபிநாத் 

                      இன்ஜினியரிங் படித்துகொண்டிருக்கும் நான் என் நாட்டுக்கு என்னை அர்பணிக்க தயார் படுத்தி கொண்டிருக்கிறேன். இந்த நாட்டுக்கும் என் உடன்பிறவா சகோதர மற்றும் சகோதரிகளுக்கு என்னால் இயன்ற சேவைகளையும் ,விழிப்புணர்வையும்,பொழுதுபோக்குகளையும் இந்த "weareleading" blog மூலம்   தருவேன் என்று உண்மையோடு சொல்லிகொள்கிறேன் .